அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெறும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்படி பாஜகவுக்கு 27; பாமகவுக்கு 18; அமமுகவுக்கு 11; தமாகாவுக்கு 5; ஐஜேகேவுக்கு 2; தமமுகவுக்கு 1; புரட்சி பாரதம் கட்சிக்கு 1 ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள்
இந்நிலையில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இன்று அறிவிப்பு வெளியானது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி
பாரதிய ஜனதா கட்சி (பாஜக)
மயிலாப்பூர் (25)
தளி (56)
மொடக்குறிச்சி (100)
உதகமண்டலம் (108)
அவினாசி (தனி) (112)
திருப்பூர் (தெற்கு) (114)
கோயம்புத்தூர் வடக்கு (118)
கந்தவாகோட்டை (தனி) (178)
புதுக்கோட்டை (180)
திருப்பத்தூர் (185)
மதுரை மேற்கு (192)
சாத்தூர் (204)
திருச்செந்தூர் (215)
வாசுதேவநல்லூர் (தனி) (220)
ராதாபுரம் (228)
நாகர்கோவில் (230)
விளவங்கோடு (233)
ஆவடி (6)
திருவண்ணாமலை (63)
தஞ்சாவூர் (174)
திருவாரூர் (168)
அறந்தாங்கி (183)
மானாமதுரை (தனி) (187)
ராமநாதபுரம் (211)
குளச்சல் (231)
பத்மநாபபுரம் (232)
ராசிபுரம் (தனி) (92)
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக)
சேலம் (மேற்கு) (88)
தருமபுரி (59)
பென்னாகரம் (58)
விக்கிரவாண்டி (75)
சோளிங்கர் (39)
மயிலாடுதுறை (161)
திருப்போரூர் (33)
உத்திரமேரூர் (36)
ஜெயங்கொண்டம் (150)
போளூர் (66)
செஞ்சி (70)
விருத்தாசலம் (152)
ரிஷிவந்தியம் (78)
காட்டுமன்னார் கோயில் (தனி) (159)
கீழ்வேளூர் (தனி) (164)
பெரம்பூர் (12)
சேலம் (வடக்கு) (89)
அம்பத்தூர் (8)
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக)
பெரியகுளம் (தனி) (199)
மன்னார்குடி (167)
திருவையாறு (173)
காஞ்சிபுரம் (184)
திருப்பத்தூர் (50)
நாங்குநேரி (227)
ஓட்டப்பிடாரம் (தனி) (217)
திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140)
சைதாப்பேட்டை (23)
பூந்தமல்லி (தனி) (5)
மடத்துக்குளம் (126)
தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா)
ஒட்டன்சத்திரம் (128)
ஈரோடு மேற்கு (99)
ராணிப்பேட்டை (41)
கிள்ளியூர் (234)
கும்பகோணம் (171)
இந்திய ஜனநாயகக் கட்சி
பல்லாவரம் (30)
குன்னம் (148)
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
ராஜபாளையம் (202)
புரட்சி பாரதம் கட்சி
கீழ்வைத்தியணாண்குப்பம் (தனி) (45)
ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 169 தொகுதியில் அதிமுக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. சின்னங்களைப் பொறுத்தவரை அந்தந்தக் கட்சிகளின் முடிவு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami announced the list of seats allocated to the parties in the AIADMK-led National Democratic Alliance.