சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அதிமுக, 169 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும், கூட்டணியில் பாஜக-வுக்கு 27 தொகுதிகள், பாமக-வுக்கு 18, அமமுக-வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து, தமாகா-வுக்கு 5 தொகுதிகள், ஐஜேகே-வுக்கு 2 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த சின்னங்கள்
இதில் பிரதான கட்சிகளான அதிமுக இரட்டை இலைச் சின்னத்திலும், பாஜக தாமரைச் சின்னத்திலும் பாமக மாம்பழச் சின்னத்திலும் அமமுக குக்கர் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. 2021-ல் அதிமுக கூட்டணியில் இருந்தபோது 6 இடங்களில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, இம்முறை 5 தொகுதிகளிலும் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல், மக்கள் நீதி மய்யம் தலைமையான கூட்டணியில் ஆட்டோ சின்னத்தில் 40 தொகுதிகளில் போட்டியிட்ட பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, இம்முறை குன்னம், பல்லாவரம் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
இதற்கு முன்னதாக அதிமுக 23 பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைக் கடந்த மார்ச் 25 அன்று அறிவித்தது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி உட்பட 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், 21 பேர் முந்தைய அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பாமக, ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
இந்நிலையில், இன்று அதிமுக போட்டியிடும் 127 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதியில் வி.டி. நாராயணசாமி, செங்கொட்டையனின் கோபிசெட்டிபாளையத்தில் வி.பி. பிரபு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், எம்.எஸ்.எம். ஆனந்தன், இசக்கி சுப்பையா, சண்முகநாதன், எம்.சி. சம்பத், கிணத்துக்கடவு தாமோதரன், முக்கூர் என். சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக வெளியிட்டுள்ள முழு வேட்பாளர் பட்டியல்-
The 2nd phase list of candidates contesting the assembly elections on behalf of the AIADMK has been released.