அதிமுகவின் வாக்குகள் ஒரு காலத்திலும் விஜய்க்கு போகாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“எம்ஜிஆர், அண்ணா படத்தைப் பொருத்திக் கொள்வதால் மட்டுமே அதிமுகவின் வாக்குகள் விஜய்க்குப் போய்விடாது. அவர் பேருந்தில் எம்ஜிஆர், அண்ணா படங்களை ஒட்டிக் கொள்ளட்டும். வணங்கட்டும், போற்றட்டும். ஆனால் அது வாக்குகளாக மாறாது. அதிமுகவின் வாக்கு ஒரு காலத்திலும் விஜய்க்கு போகாது. அதில் விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
முதல்வர் ஸ்டாலினை விஜய் முதலில் ஹலோ அங்கிள் விஜய் என்று விமர்சித்தார். பின்னர் ஸ்டாலின் சார் என்று பேசினார். என்னைக் கேட்டிருந்தால் நான் சொல்லிக் கொடுத்திருப்பேன். சிஎம் சாத்தான் சார் என்று ஸ்டாலினைக் கூப்பிட்டிருக்க வேண்டும். அவரது மகன் உதயநிதியை மை டியர் குட்டிச் சாத்தான் என்று சொல்லியிருக்க வேண்டும்.
ஆட்சியைப் பொறுத்தவரை அமைச்சர் நேரு கரூரில் நடக்கப்போகும் திமுக முப்பெரும் விழாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அக்டோபர் நவம்பரில் சென்னையில் பெருமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். உள்ளாட்சி அமைச்சராக முன்னேற்பாடு ஏற்பாடுகளில் அமைச்சர் நேரு கவனம் செலுத்தவில்லை. இன்றைய அரசின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தால், திமுக அரசு முழுமையாகத் தோல்வியடைந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மோசமாய் இருக்கிறது. லஞ்ச லாவண்யம் - இதுதான் இன்றைய தமிழ்நாட்டில் ஸ்டாலினின் சாத்தான் ஆட்சியில் நடக்கிறது.
அதேபோல, தேர்தல் பரப்புரை முழக்கமாகச் சொன்னீர்களே, செய்தீர்களா? அந்த வாசகத்தையும் விஜய் பயன்படுத்தியிருக்கிறார். எங்கள் தலைவருடைய ஸ்டைலைப் பின்பற்றுவதால், எங்கள் கட்சியின் ஓட்டு போய்விடாது”
இவ்வாறு பேசினார்.
TVK Vijay | D Jayakumar | ADMK | Stalin | Udhayanidhi |