தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: அதிமுக, தமாக உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

கிழக்கு நியூஸ்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலர்கொடி, ஹரிஹரன் ஆகியோர் முறையே அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக முதலில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் திருவேங்கடம் என்பவர் புழல் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் என மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் சதீஷ் என்பவர் திமுக நிர்வாகியின் மகன்.

மலர்கொடி மற்றும் ஹரிஹரன் முறையே அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸில் உறுப்பினராக இருந்திருக்கிறார்கள். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, மலர்கொடியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமியும், ஹரிஹரனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி ஜி.கே. வாசனும் உத்தரவிட்டுள்ளார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு:

ஜி.கே. வாசன் உத்தரவு: