கோப்புப்படம் 
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக புறக்கணிப்பு

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி தேர்தலைப் புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

கிழக்கு நியூஸ்

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ல் உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

நாடு முழுக்க காலியாக உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று இடைத்தேர்தல் அறிவித்தது. இதில் விக்கிரவாண்டியும் அடக்கம். விக்கிரவாண்டிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூலை 13-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அதிமுக மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு இடைத்தேர்தலில் அண்டா, குண்டா கொடுத்து திமுக அராஜக முறையில் வாக்குகளைப் பெற்றதாகக் குற்றம்சாட்டினார்.