மாதிரி படம் 
தமிழ்நாடு

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் விபத்து: 8 பேர் உயிரிழப்பு! | Ennore |

மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கிழக்கு நியூஸ்

சென்னை எண்ணூரில் அனல் மின் நிலையத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் சாரம் விழுந்த விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கம்பிகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாகத் தெரிகிறது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளார்கள் என முதற்கட்டமாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

முதற்கட்டமாக காயமடைந்த அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அனல் மின் நிலையக் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனத்திடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. விபத்து நிகழ்ந்த இடத்தில் காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

Ennore Thermal Plant |