கோப்புப்படம் ANI
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

அனைத்துப் பள்ளிகளுக்கும் இல்லாமல் குறிப்பிடப்பட்ட 156 பள்ளிகளுக்கு மட்டும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நியூஸ்

திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இல்லாமல் குறிப்பிடப்பட்ட 156 பள்ளிகளுக்கு மட்டும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 13 அன்று நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 8 முதல் டிசம்பர் 16 வரை 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 16,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதலுக்கிணங்க, 156 அரசு/அரசு நிதியுதவி பெறும்/தனியார் தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு டிசம்பர் 8 முதல் டிசம்பர் 16 வரை 9 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.