மக்களவைத் தேர்தலில் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றிரவு 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் தில்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகளே பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்ட தரவுகளைக் காட்டிலும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.
திருவள்ளூர் - 68.31%
வட சென்னை - 60.13%
தென் சென்னை - 54.27
மத்திய சென்னை - 53.91%
ஸ்ரீபெரும்புதூர் - 60.21%
காஞ்சிபுரம் - 71.55%
அரக்கோணம் - 74.08%
வேலூர் - 73.42%
கிருஷ்ணகிரி - 71.31%
தருமபுரி - 81.48%
திருவண்ணாமலை - 73.88%
ஆரணி - 75.65%
விழுப்புரம் - 76.47%
கள்ளக்குறிச்சி - 79.25%
சேலம் - 78.13%
நாமக்கல் - 78.16%
ஈரோடு - 70.54%
திருப்பூர் - 70.58%
நீலகிரி - 70.93%
கோவை - 64.81%
பொள்ளாச்சி - 70.70%
திண்டுக்கல் - 70.99%
கரூர் - 78.61%
திருச்சி - 67.45%
பெரம்பலூர் - 77.37%
கடலூர் - 72.28%
சிதம்பரம் - 75.32%
மயிலாடுதுறை - 70.06%
நாகப்பட்டினம் - 71.55%
தஞ்சாவூர் - 68.18%
சிவகங்கை - 63.94%
மதுரை - 61.92%
தேனி - 69.87%
விருதுநகர் - 70.17%
ராமநாதபுரம் - 68.18%
தூத்துக்குடி - 59.96%
தென்காசி - 67.55%
திருநெல்வேலி - 64.10%
கன்னியாகுமரி - 65.46%