ANI
தமிழ்நாடு

9 மணி நிலவரம்: தமிழ்நாட்டில் 12.55% வாக்குப்பதிவு

கிழக்கு நியூஸ்

தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் காலை 7 மணி முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்தார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.1 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்கு இயந்திரங்களில் கோளாறு தொடர்பாக தமிழ்நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி "4, 5 இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு என்று புகார்கள் வந்தன. இவை உடனடியாக சரி செய்யப்பட்டு வாக்குப் பதிவு சுமூகமாக நடைபெற்று வருகிறது" என்றார் அவர்.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.85% வாக்குகள் பதிவு.

புதுச்சேரியில் காலை 10 மணி நிலவரப்படி 12.75% வாக்குகள் பதிவு.