ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம்: பிரம்மாண்ட தேரில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி | Tirupathi |

முன்னதாக 7-ம் நாள் நிகழ்வில் சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்...

கிழக்கு நியூஸ்

திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி எழுந்தருளிய பிரம்மாண்ட தேரை பக்தர்கள் வடம் பிடித்திழுத்தனர்.

உலகப் புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் சட்கால பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 24-ல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் . ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கருட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 2 வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

இதில், தினமும் பிரமாண்டமான அளவில் வாகன சேவைகள் நடைபெறும். அதன்படி 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்திலும் இரவு சந்திர பிரபை வாகனத்திலும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருமலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து, 8-ம் நாளான இன்று காலை பிரம்மாண்ட ரதோற்சவம் நடைபெற்றது. அலங்கரிங்கப்பட்ட பெரிய தேரில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடம் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். கோயிலின் மாட வீதிகளில் வலம் வந்த பெரிய தேரைப் பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். சுவாமி புறப்பாட்டுக்கு முன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து நாளை (அக்.2) பிரமோற்சவத்தின் நிறைவான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற உள்ளது. பின்னர் மாலை கொடி இறக்கத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.