சிறந்த சாலையோர உணவுப் பட்டியலில் இந்தியாவின் பரோட்டா உலகளவில் 5-வது இடம் பிடித்துள்ளது.
பிரபல உணவு சார்ந்த இணையதளம் டேஸ்ட்அட்லஸ். உலகளவில் சிறந்த சாலையோர உணவுப் பட்டியல் என்ற தரவரிசைப் பட்டியலை இந்தத் தளம் வெளியிட்டுள்ளது. வட இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் வடாபாவ் மற்றும் பானி பூரி உள்ளிட்டவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.
ஆனால், சிறந்த சாலையோர உணவுப் பட்டியலில் முதல் 50 இடங்களில் இந்தியாவிலிருந்து பரோட்டா இடம்பெற்றுள்ளது, அதுவும் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பரோட்டாவைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து அமிருதசரஸ் குல்ச்சா எனும் உணவு 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. சோலே படூரே என்ற உணவு 40-வது இடத்தைப் பிடித்துள்ளது. 50 சிறந்த உணவுப் பட்டியலில் இந்தியா சார்பில் மொத்தம் 3 உணவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த கரன்டிடா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சீனாவின் குவோடி, இந்தோனேஷியாவின் சியோமே மற்றும் மெக்ஸிகோவின் க்வெசாபிரியா ஆகிய உணவுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.