கோப்புப் படம் ANI
இந்தியா

உ.பி. ஆன்மிக நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பலரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யோகேஷ் குமார்

ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் ஏற்பட்ட காரணத்தால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் இன்று ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள மக்கள் வெள்ளம் போல் திரண்ட நிலையில், மிகப்பெரிய அளவில் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பலரும் அந்த கூட்டநெரிசலில் சிக்கி சிரமப்பட்டுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பலரும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.