ANI
இந்தியா

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆதித்யா ஸ்ரீவத்ஸவா முதலிடம்

கிழக்கு நியூஸ்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அகில இந்திய அளவில் ஆதித்யா ஸ்ரீவத்ஸவா முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் முறையே கடந்தாண்டு செப்டம்பரிலும், ஜனவரியில் தொடங்கியும் நடைபெற்றன. மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்கு 1,016 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

ஆதித்யா ஸ்ரீவத்ஸவா என்பவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அனிமேஷ் பிரதான் மற்றும் டோனுரு அனன்யா ரெட்டி அடுத்த இரு இடங்களைப் பிடித்துள்ளார்கள். ஆதித்யா ஸ்ரீவத்ஸவா கான்பூர் ஐஐடியில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.

அகில இந்திய அளவில் 78-வது இடத்தைப் பிடித்துள்ள சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பிரசாந்த் தமிழ்நாட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் 25 இடங்களைப் பிடித்தவர்களில் 15 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள். மத்திய அரசுப் பணிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 1,016 பேரில் 115 பேர் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 303 பேர், பட்டியலினத்தவர்கள் 165 பேர், பழங்குடியினர் 86 பேர். மீதமுள்ள 347 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.

யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.