https://x.com/UPI_NPCI
இந்தியா

யுபிஐ பரிவர்த்தனை உச்ச வரம்பு அதிகரிப்பு: செப். 15 முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு | UPI Payments |

வணிக பயன்பாட்டுக்கான பரிவர்த்தனையின் உச்ச வரம்பு ரூ. 10 லட்சம் வரை உயர்த்தி அறிவிப்பு...

கிழக்கு நியூஸ்

யுபிஐ மூலம் வணிக பயன்பாட்டுக்கான பண பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பை ரூ. 10 லட்சமாக உயர்த்தி என்பிசிஐ அறிவித்துள்ளது.

டிஜிட்டல் இந்தியாவின் முன்னெடுப்பாக யுபிஐ மூலம் பணம் அனுப்பும் பரிவர்த்தனைதான் இன்று அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இதையடுத்து யுபிஐ பரிவர்த்தனைக்கான நடைமுறைகளைச் சீராக்குவதற்கான மேம்பாடுகளை அரசு முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனை வரம்புகளை அதிகரித்து என்பிசிஐ எனப்படும் இந்திய தேசிய கட்டணம் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி 24 மணி நேரத்தில் தனிநபரிடம் இருந்து வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு முன்னர் இருந்த ரூ. 2 லட்சம் என்ற உச்ச வரம்பு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சமாகவே தொடர்கிறது என்று இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் அறிவித்துள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPI Payments | NBCI | UPI |