நாடாளுமன்றம் (கோப்புப்படம்) 
இந்தியா

டிசம்பர் 1-ல் கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்! | Parliament |

டிசம்பர் 1 முதல் 19 வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும்...

கிழக்கு நியூஸ்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மூன்று முறை கூட்டப்படுவது வழக்கம். அதன்படி 2025 ஆண்டின் தொடக்கத்தில் மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது.

அதற்கடுத்தபடியாக குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார். அதில்,

“டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்ற அலுவல் தேவைகளுக்காக குளிர்கால கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கான அரசு முன்மொழிவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்கீகரித்துள்ளார். நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையிலும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலும் ஆக்கப்பூர்வமான அர்த்தமுள்ள அமர்வை எதிர்நோக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத் தொடரில் மத்திய அரசு பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ராகுல் காந்தி முன்வைத்த வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு போன்றவற்றை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Union Minister Kiren Rijiju announced the President Droupadi Murmu's approval on the commencement of Parliament Winter session from 1st December 2025 to 19th December 2025.