2026-27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முக்கிய அம்சங்கள்:
* பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க 6 அம்சத் திட்டத்தை முன்மொழிந்தார் நிதியமைச்சர்.
* வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை.
* ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது.
* 2026-27 நிதியாண்டில் 16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு.
* மருத்துவக் கல்விக் கடனுக்கான வரி 5%-லிருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
* கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்துக்கான ஆதார வரி (TCS), 5%-லிருந்து 2%-ஆகக் குறைக்கப்படும்.
* வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் பலனடையும் வகையில் வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவதற்கான வரி குறைக்கப்படும்.
* வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்துகளின் வரி குறைக்கப்படும்.
* வருமான வரித் தாக்கலில் பொய்க் கணக்கு காண்பிக்கப்பட்டால் 100% அபராதம்.
தமிழ்நாடு, கேரளா, ஒடிஷாவில் அரிய வகைக் கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும்.
முக்கிய நகரங்களில் தலா ரூ. 5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.
* சென்னை - ஹைதராபாத், சென்னை - பெங்களூரு உள்ளிட்ட 7 அதிவேக ரயில் தடங்கள் உருவாக்கப்படும்.
* பிரம்மாண்ட ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.
* இந்தியாவில் கிளவுட் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 வரை வரிவிலக்கு.
* அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றி அமைப்பதற்காக ‘கேலோ இந்தியா’ திட்டம் தொடங்கப்படும்.
* மூன்று புதிய அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ நிறுவனங்கள் அமைக்கப்படும்.
பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க 3 புதிய கண்காணிப்புக் * கோபுரங்கள் அமைக்கப்படும்.
* புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கு சுங்க வரி நீக்கம்.
* பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
* தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் உள்பட நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
* செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ. 40,000 கோடி ஒதுக்கீடு.
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று 1.25 மணி நேரம் நிதிநிலை அறிக்கையை வாசித்தார்.
முன்னதாக நிதி அமைச்சகச் செயலாளர்களுடன் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருக்கு இனிப்பு வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.
இந்தமுறை கையால் நெய்த தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப்புடவையை நிதியமைச்சர் அணிந்து வந்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு. நிஃப்டியும் 700 புள்ளிகளுக்கு மேல் சரிவு.