இந்தியா

டிசம்பர் முதல் யுஜிசி நெட் தேர்வுகள்: தேசிய தேர்வு முகமை | UGC NET |

தேர்வு நடக்கும் இடங்கள் தேர்வுக்கு 10 நாள்களுக்கு முன் அறிவிக்கப்படும்...

கிழக்கு நியூஸ்

நாடு முழுவதும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை யுஜிசி நெட் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முனைவர் பட்டப் படிப்பிற்கான கல்வி உதவித் தொகை பெற, உதவிப் பேராசிரியர் தகுதி மற்றும் ஆய்வு மாணவர் சேர்க்கை ஆகியவற்றுக்கு யுஜிசியின் கீழ் தேசிய தேர்வு முகமை தகுதித் தேர்வுகளை ஆண்டுதோறும் இருமுறை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 31 முதல் 2026 ஜனவரி 07 வரை கணினி முறைத் தேர்வாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 85 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் எந்தெந்த நாட்களில் தேர்வு நடத்தப்படும் என்ற விரிவான விவரங்கள் ugcnet.nta.nic.in என்ற வலைத்தளத்தில் தேர்வுக்கு 10 நாள்களுக்கு முன்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதுபவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ugcnet.nta.nic.in என்ற முகவரியைப் பின் தொடர்ந்து தேர்வு குறித்த கூடுதல் அறிவிப்புகள் மற்றும் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.