இந்தியா

நாளை (ஜூலை 1) முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: முழுக் கட்டண விவரம்!

புறநகர் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

கிழக்கு நியூஸ்

ரயில் கட்டணம் நாளை (ஜூலை 1) முதல் உயரவுள்ளதாக அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் இந்திய ரயில்வே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

புறநகர் ரயில்

  • கட்டண உயர்வு இல்லை

சீசன் டிக்கெட் (புறநகர் & புறநகர் அல்லாத)

  • கட்டண உயர்வு இல்லை

சாதாரண இரண்டாம் வகுப்பு

  • 0 - 500 கி.மீ. வரை - கட்டண உயர்வு இல்லை

  • 501 - 1,500 கி.மீ. வரை - ரூ. 5 கட்டண உயர்வு

  • 1,501 - 2,500 கி.மீ. வரை - ரூ. 10 கட்டண உயர்வு

  • 2,501 - 3,000 கி.மீ. வரை - ரூ. 15 கட்டண உயர்வு

சாதாரண ஸ்லீப்பர் வகுப்பு

  • கி.மீ.-க்கு அரை பைசா கட்டண உயர்வு

சாதாரண முதல் வகுப்பு

  • கி.மீ.-க்கு அரை பைசா கட்டண உயர்வு

மெயில்/விரைவு ரயில்கள்

  • ஏசி அல்லாத வகுப்புகள் - கி.மீ.-க்கு 1 பைசா கட்டண உயர்வு

  • ஏசி வகுப்புகள் - கி.மீ.-க்கு 2 பைசா கட்டண உயர்வு

ரயில்வே செயல்பாடுகளுக்கான செலவை ஈடுகட்டும் வகையில், அதேசமயம் பயணிகளின் சுமையை அதிகரிக்காத வகையில் கட்டணத்தை உயர்த்த இந்திய ரயில்வே இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, ஐஆர்சிடிசி மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என்ற நடைமுறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்தது. இதுவும் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.