சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: அத்தியாவசிய பொருள்கள் சட்டம் அமல் ANI
இந்தியா

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: அத்தியாவசிய பொருள்கள் சட்டம் அமல் | LPG | ESMA |

இந்தியாவுக்கு வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் அளவை 60% ஆக குறைந்துள்ளது...

கிழக்கு நியூஸ்

நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டு தொடங்கியுள்ள நிலையில், பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும், அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும், உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. இதன் பாதிப்பு உலகம் முழுவதிலும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்திலும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவில் என்ன பாதிப்பு?

இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பெங்களூருவில் இன்று முதல் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஒப்பந்தம் உதவுமா?

இது தொடர்பாக எரிசக்தி துறையைச் சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியபோது, “ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலே இந்தத் தட்டுப்பாட்டை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த நாட்டிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்தியாவின் முக்கிய சமையல் எரிவாயு விநியோகிஸ்தரான கத்தார் தனது எரிவாயு உற்பத்தி மையங்களை ஈரான் தாக்குதலுக்குப் பிறகு மூடியுள்ளது. இதுவும் சேர்ந்ததனால் இந்தியாவுக்கு வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் அளவை 60% ஆக குறைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்தியாவசிய பொருள்கள் சட்டம் அமல்

இதையடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கலை தடுக்க அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு உற்பத்தி

இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளாவிய எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்கும் தற்போதைய புவிசார் அரசியல் இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, சமையல் எரிபொருள் (எல்.பி.ஜி) உற்பத்தியை அதிகரிக்கவும், உள்நாட்டு நுகர்வோர் மற்றும் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியமான துறைகளுக்கு அதன் இருப்பை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்ற உள்நாட்டு துறைகளிடமிருந்து வரும் கோரிக்கைகள், எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் செயல் இயக்குநர்களைக் கொண்ட ஒரு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் தகுதி, அவசியம் மற்றும் எரிபொருள் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். மற்ற துறைகளின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை மின்னஞ்சல்கள் மூலம் தெரிவிக்கலாம். ” என்று கூறப்பட்டுள்ளது.

The government invoked Essential Services Maintenance Act to direct oil refineries to ramp up LPG production as it looks to increase the availability of domestic cooking gas to hedge against potential disruptions from the widening Middle East conflict