முறைகேடில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இடைநீக்கம்!
முறைகேடில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இடைநீக்கம்! 
இந்தியா

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்’: மதிப்பெண் வழங்கிய ஆசிரியர்கள் இடைநீக்கம்!

யோகேஷ் குமார்

தேர்வுத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்பூர் நகரில் வீர்பகதூர் சிங் பூர்வாஞ்சல் என்ற பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நன்றாக படிக்கும் மாணவர்களைவிட குறைவாக படிக்கும் 4 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், சக மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சந்தேகத்திற்கு உட்பட்ட மாணவர்களின் விடைத்தாளை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக வாங்கி பார்த்ததில், அதில் சில முறைகேடுகள் நடந்திருந்தது தெரியவந்துள்ளது.

தேர்வுத்தாளில் ‘ஜெய் ஸ்ரீராம்’ மற்றும் விராட் கோலி, ரோஹித் சர்மா உட்பட சில கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை அவர்கள் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை தேர்வில் தேர்ச்சிபெற வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக் குழு ஒன்று வெளியில் இருந்து மதிப்பீடு செய்தபோது, ஒரு மதிப்பெண் கூட பெறாத மாணவர்கள்கூட, 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்ததுள்ளது.

இந்நிலையில் இந்த முறைகேடில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.