ANI
இந்தியா

பிளஸ் 2 முடித்தவரா?: மத்திய அரசில் குரூப் சி காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியீடு!

எல்லை சாலைகள் அமைப்பில் காலிப் பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில், அவற்றுக்கு ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

மத்திய அரசுத் துறைகளில் குரூப் சி பிரிவில் உள்ள 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எஸ்.எஸ்.சி. அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் உள்ள பிரிவு எழுத்தர் (LDC), செயலக இளநிலை உதவியாளர் (JSA), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) ஆகிய 3,131 காலிப் பணியிடங்களுக்கு  ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் (Staff Service Select) வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி: +2

வயது வரம்பு (பொது பிரிவினர்): 18-27

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 18

விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்த கடைசி தேதி: ஜூலை 19

முதல் கட்ட தேர்வு (கணினி வழி): ஜூலை 23 முதல் ஜூலை 24

இரண்டாம் கட்ட தேர்வு (கணினி): பிப்ரவரி-மார்ச் 2026

மேலும் விவரங்களுக்கு: ssc.gov.in

முக்கியக் குறிப்பு: எல்லை சாலைகள் அமைப்பில் காலிப் பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில், அவற்றுக்கு ஆண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.