கோப்புப் படம் ANI
இந்தியா

ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு

யோகேஷ் குமார்

ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி இடங்களை ஒதுக்கீடு செய்ய மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ராஜ்தானி, ஷதாப்தி வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி இருக்கைகளை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

2-வது வகுப்பு படுக்கை வசதி பிரிவில் - 4 இடங்கள்

3-ஈ அல்லது 3-ஏ ஏசி பிரிவில் - தலா 4 இடங்கள்

முன்பதிவு செய்து அமர்ந்து பயணிக்கும் 2-ம் வகுப்பு பெட்டிகள் மற்றும் ஏசி பெட்டிகளில் - 4 இடங்கள்

8 பெட்டிகளுடைய ரயிலில் சி1 மற்றும் சி7 பெட்டிகள் மற்றும் 16 பெட்டிகளுடைய ரயிலில் சி1 மற்றும் சி14 பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி இருக்கைகளை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வேயிடம் இருந்து அடையாள அட்டையை பெற்று கொண்டு மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.