தில்லி கலவரம் தொடர்பான வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலீத்துக்கு ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
தில்லியில் கடந்த 2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 53 பேர் பலியாகினர். 700-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தார்கள். இந்தக் கலவர வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம், உமர் காலித் உட்பட 15 பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
ஜாமின் மனு நிராகரிப்பு
இதையடுத்து கைதானவர்களுக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 10 அன்று தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது ஜாமின் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன.
கால தாமதம் பொருட்டல்ல
இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தபோது கூறியதாவது;-
“நீண்டகால சிறைத் தண்டனையின் ஜாமின் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில், ஜாமின் கோரும்போது தாமதம் என்பது ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படாது. இதனால் இவ்வழக்கில் தொடர்புள்ள குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரான் ஹெய்டர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அஹமத் ஆகிய ஐவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. ஆனால், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளதாகக் கருதப்படுவதால் உமர் காலித், சார்ஜில் இமாம் ஆகியோர் வழக்குகளை தனியாக பார்க்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
The Supreme Court has refused to grant bail to Umar Khalid in a case related to the Delhi riots.