சாகித்ய அகாடமி விருது (கோப்புப்படம்) 
இந்தியா

சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு திடீர் ரத்து: எழுத்தாளர்கள் ஏமாற்றம் | Sahitya Akademi |

பண்பாட்டு அமைச்சகத்தின் முன் அனுமதி இன்றி விருதுகளை அறிவிக்கும் எந்த செயல்முறையையும் மேற்கொள்ளக்கூடாது...

கிழக்கு நியூஸ்

நாட்​டில் இலக்​கி​யத்​துக்​கான உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதுகள் அறி​விப்பு திடீரென ரத்து செய்​யப்​பட்​டுள்ளது எழுத்தாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கலை பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் இந்​தி​யா​வில் உள்ள 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

இந்​நிலை​யில், 2025ம் ஆண்டு விருதுகளுக்​கான எழுத்தாளர்​களின் பட்டியலை தேர்​வுக் குழுக்கள் பரிந்​துரை செய்​தன. அதன் பின்​னர் சாகித்ய அகாடமி தேசிய நிர்​வாகக் குழுக்கூட்​டம் நேற்று (டிச. 18) நடை​பெற்​றது. அதில் 24 மொழிகளில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எழுத்​தாளர்​களின் பட்​டியல் சமர்ப்​பிக்​கப்​பட்டு ஒப்​புதலும் வழங்​கப்​பட்​டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து விருதாளர்களின் பெயர்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெறவிருந்த நிலையில், திடீரென அது ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து விருதுகள் அறிவிப்பது தொடர்பாக பண்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு காரணமாகவே அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், “2025-26 ஆண்டிற்காக அகாடமிகளுக்கும் அமைச்சகத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, விருதுகளை மறுசீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதனால் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகே விருதுகள் அறிவிக்கப்படும். மறுசீரமைப்பு செயல்முறை அமைச்சகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படும் வரை, அமைச்சகத்தின் முன் அனுமதி இன்றி விருதுகளை அறிவிக்கும் எந்த செயல்முறையையும் மேற்கொள்ளக்கூடாது” என்று பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகாடமி, லலித் கலா அகாடமி மற்றும் சாகித்ய அகாடமி ஆகிய நான்கு தன்னாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது அறிவிப்புக்காக காத்திருந்த எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய வாசகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The sudden cancellation of the Sahitya Akademi Awards, the highest literary award in the country, has caused disappointment among writers.