ANI
இந்தியா

பிஹாரில் இறுதியானது மெகா கூட்டணி!

ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் போட்டியிடுகிறது.

கிழக்கு நியூஸ்

பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சித் தலைவர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையகத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

தொகுதிப் பங்கீட்டின்படி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 26 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும், இடதுசாரிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன.