இந்தியா

மத்திய அரசுக்கு 2.10 லட்சம் கோடி வழங்க ஆர்பிஐ ஒப்புதல்

கிழக்கு நியூஸ்

ரூ. 2.10 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு உபரி நிதியாக வழங்க மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்பிஐ-யின் 608-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2022-23-ம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட நிதியைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

2022-23-ம் நிதியாண்டில் ரூ. 87,416 கோடி ஈவுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மீண்டு வந்ததால், சிஆர்பி 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 2023-24-ம் நிதியாண்டில் பொருளாதாரம் வலுவாகவும், உறுதியுடனும் இருப்பதால் சிஆர்பியை 6.5 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான ஆர்பிஐயின் செயல்பாடுகள், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலை உள்ளிட்டவற்றின் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.