ANI
ANI
இந்தியா

மக்களவையில் ராகுல் பேசியது நீக்கம்: காங்கிரஸ் எம்.பி.க்கள் கண்டனம்

ராம் அப்பண்ணசாமி

உகுடியரசுத் தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசினார்.

தன் பேச்சில் பிரதமர் மோடியையும், பாஜகவின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து ராகுல் பேசிய நிலையில், இன்று அவரது பேச்சின் சில பகுதிகள் மக்களவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று மக்களவை கூடியதும், ராகுல் பேச்சின் சில பகுதிகள் நீக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். மக்களவையில் எம்.பி.க்கள் அல்லது அமைச்சர்கள் பேசும் பேச்சுக்களை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவே நீக்கும் அதிகாரம், மக்களவை சபாநாயகருக்கு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே, `மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை. எனது பேச்சில் எதை வேண்டுமானலும் (அவர்கள்) நீக்கட்டும், ஆனால் நான் பேசியது உண்மைதான். உண்மையை யாராலும் எங்கிருந்தும், எப்போதும் நீக்கமுடியாது’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ராகுல் காந்தி.

நீட் தேர்வு முறைகேடு, அக்னிவீர் திட்டம், மணிப்பூர் கலவரம், வேளாண் திருத்தச்சட்டங்கள், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற முந்தைய பாஜக அரசின் சில முக்கிய நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து நேற்று மக்களவையில் உரையாற்றியிருந்தார் ராகுல் காந்தி.