@narendramodi
இந்தியா

அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நாம் ஒன்றாக இணைந்து உலகளாவிய அமைதிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றுவோம்.

யோகேஷ் குமார்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மையை நெருங்கியுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எக்ஸ் பதிவில்: “தேர்தலில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ள எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள். முந்தைய ஆட்சிக் காலத்தின் வெற்றிகளைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள். இந்தியா - அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாம் மீண்டும் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கி இருக்கிறேன். நாம் ஒன்றாக இணைந்து உலகளாவிய அமைதிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பணியாற்றுவோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.