குவஹாத்தியில் பிரதமர் மோடி ANI
இந்தியா

அஸ்ஸாமில் ரூ. 4,000 கோடியில் புதிய விமான முனையம்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி | PM Modi |

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் தொலைப்பேசியில் உரையாற்றினார் மோடி...

கிழக்கு நியூஸ்

அஸ்ஸாமில் ரூ. 4,000 கோடி செலவில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக மேற்கு வங்கத்தில் ரூ. 3,200 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். அதன்பின் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளச் சென்றபோது மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் திரையிறக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் அங்கு திரண்டிருந்தோர் மத்தியில் தொலைப்பேசி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதன்பின், கொல்கத்தாவிலிருந்து அஸ்ஸாம் வந்த பிரதமர் மோடி, குவஹாத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் பேசியதாவது:-

“கடந்த 11 ஆண்டுகளில், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய அடையாளமாக இந்த உட்கட்டமைப்பு மேம்பாடு மாறி வருகிறது. இது தொழில்களை ஊக்குவிக்கிறது. முதலீட்டாளர்களுக்கு இணைப்பில் நம்பிக்கையை அளிக்கிறது. உள்ளூர் தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறது. புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களின் நம்பிக்கையை உயர்த்துகிறது. எனவே, வரம்பற்ற சாத்தியக்கூறுகளின் விமானத்தில் அஸ்ஸாம் முன்னேறுவதை நாம் காண்கிறோம்.

இன்று இந்தியா குறித்த உலகின் பார்வை மாறிவிட்டது. இந்தியா இப்போது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற உள்ளது. இதில் மிகப் பெரிய பங்கு நவீன உட்கட்டமைப்பின் வளர்ச்சியாகும். வளர்ந்த இந்தியா என்ற உறுதியை நிறைவேற்ற, 2047-க்கு இந்தியா தயாராகி வருகிறது. நாம் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்துகிறோம். மிக முக்கியமாக, நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் இந்த மாபெரும் வளர்ச்சி பிரசாரத்தில் பங்கேற்கிறது.

காங்கிரஸ் அரசாங்கங்கள் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளை வளர்ச்சியிலிருந்து விலக்கி வைத்த பாவத்தைச் செய்தன. மேலும் நாடு அதன் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் அதற்காக மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. காங்கிரஸ் அரசாங்கங்களின் காலத்தில், பல தசாப்தங்களாக வன்முறை சகாப்தம் செழித்தது. வெறும் 10-11 ஆண்டுகளில், அதை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கி நாம் நகர்கிறோம். வன்முறையால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட வடகிழக்கில் உள்ள மாநிலங்கள் இன்று லட்சிய மாநிலங்களாக வளர்ந்து வருகின்றன.

இன்று, முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மாவின் அரசாங்கம், அஸ்ஸாமின் வளங்களை இந்த சட்டவிரோத மற்றும் தேச விரோத ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க மிகுந்த முயற்சியுடன் கடுமையாக உழைத்து வருகிறது” என்றார்.

Prime Minister Narendra Modi has inaugurated a new terminal at an international airport in Assam, which was constructed at a cost of 4,000 Crore.