ANI
இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடிதான் ஆபரேஷன் சிந்தூர்: அமித்ஷா

பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களைக் குறிவைத்து நள்ளிரவு நேரத்தில் `ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`நமது பாதுகாப்புப் படைகளுக்காகப் பெருமைப்படுகிறேன். ஆபரேஷன் சிந்தூர் என்பது பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு இந்தியாவின் பதில்.

இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கு மோடி அரசு பதிலடி கொடுக்கும். பயங்கரவாதத்தை வேரோடு அழிப்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது’ என்றார்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள்தான் இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.