ANI
இந்தியா

அடுத்த 3 மாதங்களுக்கு மன் கி பாத் கிடையாது: பிரதமர் மோடி

முதல் தலைமுறை வக்காளர்களுக்கு, "உங்களுடைய முதல் வாக்கு நாட்டுக்கானதாக இருக்க வேண்டும்" என்றார்.

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால் அடுத்த மூன்று மாதங்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சி கிடையாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

110-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார்.

பெண்கள் குறித்து பேசிய அவர், "மார்ச் 8-ல் நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடவுள்ளோம். நாட்டின் வளர்ச்சிப் பாதையில் மகளிரின் பங்களிப்புக்குத் தலை வணங்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும். பெண்களுக்கும் சம வாய்ப்பு கிடைத்தால்தான் நாடு வளமடையும் என சிறந்த கவிஞர் பாரதியார் கூறியிருக்கிறார்" என்றார்.

முதல் தலைமுறை வக்காளர்களுக்கு, "உங்களுடைய முதல் வாக்கு நாட்டுக்கானதாக இருக்க வேண்டும்" என்றார்.

மக்களவைத் தேர்தல் குறித்து பேசுகையில், "மார்ச் மாதம் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரலாம். நாம் அடுத்த முறை சந்திக்கும்போது மன் கி பாத்தின் 111-வது நிகழ்ச்சியாக இருக்கும்" என்றார் பிரதமர் மோடி.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அக்டோபர் 3, 2014 முதல் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.