நிதிஷ் குமார் (கோப்புப்படம்) 
இந்தியா

பிஹாரில் மீண்டும் முதல்வராகிறார் நிதிஷ் குமார்! | Nitish Kumar | Bihar Election 2025 | NDA |

பெரும்பான்மைக்கு 122 இடங்களே தேவை என்ற நிலையில் 190 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை.

கிழக்கு நியூஸ்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

243 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட பிஹாரில் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக 66.91% சதவீத வாக்குகள் பதிவாகின. பிஹார் வரலாற்றிலேயே இந்தளவுக்கு வாக்குகள் பதிவானது கிடையாது.

முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிட்டன. தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணியாகப் போட்டியிட்டன. பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்துக் களம் கண்டது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 11.30 மணி நிலவரம்

காலை 11.30 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பிஹாரில் ஆட்சியமைக்க 122 தொகுதிகளில் வென்றாலே போதும். இதன்மூலம், நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகத் தொடரவுள்ளார்.

இண்டியா கூட்டணி 49 இடங்களில் மட்டும முன்னிலை வகித்து வருகின்றன. ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

பாஜக 84 இடங்களிலும் ஐக்கிய ஜனதா தளம் 76 இடங்களிலும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சிகள் 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

இண்டியா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 35 இடங்களிலும் காங்கிரஸ் 7 இடங்களிலும் சிபிஐ (எம்எல்) 6 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

In a resounding verdict, the Nitish Kumar–led NDA swept the Bihar polls, consolidating its hold on the state.

Nitish Kumar | NDA | BJP | JDU | Tejashwi Yadav | RJD | INDIA Alliance | Mahagatbandhan | Congress | Chirag Paswan | Lok Janashakthi (Ram Vilas) | Jan Suraaj Party | Prashant Kishor | Bihar | Bihar Election | Bihar Election 2025 | Bihar Elections | Bihar Elections 2025 |