மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த நிதிஷ் குமார் ANI
இந்தியா

அமித்ஷா முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார் நிதிஷ் குமார் | Nitish Kumar | Rajya Sabha |

பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட மற்ற வேட்பாளர்களும் வேட்பு மனுத் தாக்கல்...

கிழக்கு நியூஸ்

பிஹார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், அமித் ஷா முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பிஹாரில் கடந்த 2005 முதல் 25 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தவர் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார். குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் பாஜகவுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு, 85 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஐக்கிய ஜனதா தளம். இதையடுத்து ஆட்சியைத் தக்க வைத்து முதலமைச்சராகப் பதவியைத் தொடர்ந்த நிதிஷ் குமார், இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டி

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 37 இடங்களுக்கு வரும் மார்ச் 16 அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிஹார் மாநிலத்தில் 4 இடங்கள் காலியாக உள்ளன. பாஜக சார்பில் பாஜக தேசிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பிஹாரின் முன்னாள் அமைச்சர் நிதின் நபின், சிவேஷ் குமார் ஆகியோரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நிதிஷ் குமார் மற்றும் மத்திய அமைச்சர் ராம்நாத் தாகூர் ஆகியோரும் போட்டியிடுகிறர்கள். இதற்காக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அமித் ஷா முன்னிலையில் வேட்புமனு தாக்கல்

முன்னதாக “எனது பொது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து பிஹார் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக வேண்டும் என்று நான் விரும்பினேன். எனவே, இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்” என்று உருக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த நிதிஷ் குமார், பின்னர் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர் போட்டிக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து நிதின் நபின் உட்பட போட்டியிடும் மற்ற வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். அப்போது பிஹார் பாஜக மாநில தலைவர் சஞ்சய் சரோகி, துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

துணை முதலமைச்சர் ஆகும் நிதிஷ் மகன்

நிதிஷ் குமாரின் ராஜினாவாமைத் தொடர்ந்து, பிஹாரின் அடுத்த முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​பார் என்றும் கூறப்படுகிறது. மேலும், நிதிஷ் குமார் விரைவில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் தெரியவருகிறது.

Bihar Chief Minister Nitish Kumar files his nomination papers for the Rajya Sabha at the Vidhan Sabha, in Patna on Thursday. Union Home Minister Amit Shah, BJP National President Nitin Nabin, Bihar BJP President Sanjay Saraogi, State Deputy CM Samrat Choudhary also present