கடந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி வகிதக் கட்டமைப்பில் மாற்றம் செய்து, புதிய அறிவிப்பை இன்று (பிப்.01) வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நீர்மலா சீதாராமன்.
2025-2026-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
புதிய வருமான வரி வகிதக் கட்டமைப்பில் மாற்றம் செய்து இன்று அவர் கூறியதாவது,
ரூ. 4 லட்சம் வருமானம் வரை வரி இல்லை.
ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை 5 சதவீதம் வரி.
ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை 10 சதவீதம் வரி.
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை 15 சதவீதம் வரி.
ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை 20 சதவீதம் வரி.
ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை 25 சதவீதம் வரி.
ரூ. 24 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரி.
கடந்தாண்டு (2024-2025) மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி வகிதக் கட்டமைப்பு,
ரூ. 3 லட்சம் வருமானம் வரை வரி இல்லை.
ரூ. 3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை 5 சதவீதம் வரி.
ரூ. 7 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை 10 சதவீதம் வரி.
ரூ. 10 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை 15 சதவீதம் வரி.
ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை 20 சதவீதம் வரி.
ரூ. 15 லட்சத்திற்கு மேல் 30 சதவீதம் வரி.
மேலும், கடந்தாண்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 7 லட்சமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்படுவதாக இன்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.