தில்லியில் புதிதாக அமையவுள்ள பிரதமர் அலுவலகம், 'சேவா தீர்த்' எனப் பெயரிடப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசின் துறைகளுக்காக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கிய அமைச்சர்களின் அலுவலகங்களும் முக்கிய அரசு அலுவலகங்களும் இடம்பெறவுள்ள. குறிப்பாக அதில் பிரதமரின் புதிய அலுவலகம் அமைகிறது. இந்நிலையில், அதற்கு ‘சேவா தீர்த்’ என்று பெயர் வைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சேவா தீர்த் என்ற சொல்லுக்கு ‘சேவைகள் வழங்கப்படும் புனித இடம்’ என்று பொருள்.
ஏற்கெனவே கடந்த 2016-ல் பிரதமரின் இல்லம் இருக்கும் முகவரியின் பெயர் ரேஸ் கோர்ஸ் சாலை என்பதிலிருந்து லோக் கல்யாண் மார்க் என்று பெயர் மாற்றப்பட்டது. அதேபோல், 2022-ல் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் செல்லும் வழியான ராஜ பாதை, கடமைப் பாதை என்று பெயர் மாற்றப்பட்டது. மேலும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கொள்கையின் அடிப்படையில் ஜனநாயக அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்தும் விதமாக நாட்டில் உள்ள அனைத்து ராஜ்பவன்களும் லோக் பவன் என்றும், ராஜ் நிவாஸ்களும் லோக் நிவாஸ் என்றும் பெயர் மாற்றப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி, நேற்று (டிச. 1) முதல் ஆளுநர் மாளிகைகளின் பெயர்கள் மாற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, பிரதமரின் புதிய அலுவலகத்தின் பெயரும் மாற்றப்பட உள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
The new complex housing the Prime Minister's Office (PMO) will be called 'Seva Teerth', officials said on Tuesday.