பாஜகவில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.பி.க்கள், பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று ஆம் ஆத்மி அமைச்சர் செளரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கெளதம் கம்பீர் என தில்லியைச் சேர்ந்த தற்போதைய எம்.பி.க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு தரவில்லை.
பாஜகவின் இந்த முடிவு குறித்துப் பேசிய செளரப் பரத்வாஜ், "பாஜக எம்.பி.க்கள் களத்தில் எதுவும் செய்யவில்லை என்பதையும், அரிதாகவே தங்கள் தொகுதி மக்களைச் சந்தித்தார்கள் என்பதையும் பாஜக ஒப்புக்கொண்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது" என்றார்.