கோப்புப்படம் ANI
இந்தியா

தர்மேந்திர பிரதான் பதவியேற்பு: முழக்கங்களை எழுப்பிய எதிர்க்கட்சியினர்!

கிழக்கு நியூஸ்

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பதவியேற்றுக் கொண்டபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 'நீட்.. நீட்..' என முழக்கங்களை எழுப்பினார்கள்.

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. மக்களவைக்குத் தேர்வான எம்.பி.க்கள் பதவியேற்றுக்கொண்டார்கள். முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டார்கள்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்கும்போது, எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினார்கள். இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ள நிலையில், 'நீட்.. நீட்..' என முழக்கங்களை எழுப்பினார்கள்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் குழப்பங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த, மத்திய கல்வி அமைச்சகம் உயர்நிலைக் கூட்டத்தை அமைத்துள்ளது.