ஃபரூக் அப்துல்லா (கோப்புப்படம்)
ஃபரூக் அப்துல்லா (கோப்புப்படம்) ANI
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்துப் போட்டி: இண்டியா கூட்டணியில் சிக்கல்

கிழக்கு நியூஸ்

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்துப் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு குறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த ஃபரூக் அப்துல்லா தெரிவித்ததாவது:

"தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, தேசிய மாநாட்டுக் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து இரு மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என நினைக்கிறேன்."

ஃபரூக் அப்துல்லா தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சிகளுக்கும் வரம்புகள் உள்ளது. தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி இண்டியா கூட்டணியில் நீடிக்கின்றன" என்றார்.

ஃபரூக் அப்துல்லாவும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது இண்டியா கூட்டணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுவதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணியிலிருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. இண்டியா கூட்டணியை ஒருங்கிணைத்தவர்களின் மிக முக்கியமானத் தலைவரான நிதிஷ் குமார், பிகாரில் மெகா கூட்டணியிலிருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.