முரளிதரன் @MBPatil
இந்தியா

கர்நாடக குளிர்பான நிறுவனம்: முரளிதரன் ரூ. 1400 கோடி முதலீடு!

“ஓய்வுக்குப் பிறகு தனது நாட்டில் குளிர்பான உற்பத்தி ஆலையைத் தொடங்கிய முரளிதரன் அதனை விரிவுப்படுத்த நமது மாநிலத்தைத் தேர்வு செய்துள்ளார்”.

யோகேஷ் குமார்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் உள்ள குளிர்பான நிறுவனத்தில் ரூ. 1400 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ. 1400 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சரும் எம்.பி.யுமான பாட்டீல் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை பாட்டீல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “ஓய்வுக்குப் பிறகு தனது நாட்டில் குளிர்பான உற்பத்தி ஆலையைத் தொடங்கிய முரளிதரன் அதனை விரிவுப்படுத்த நமது மாநிலத்தைத் தேர்வு செய்துள்ளார்” என்றார்.

இந்த திட்டத்திற்காக ஏற்கெனவே 46 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2025 ஜனவரி மாதம் முதல் இதன் உற்பத்தி தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.