பிரதமர் மோடி ANI
இந்தியா

தமிழ் ஊடகத்தில் பிரதமர் மோடியின் பிரத்யேகப் பேட்டி!

பிரதமர் மோடியின் முதல் பிரதேயகப் பேட்டி என்கிற குறிப்புடன் விளம்பரம் வெளியாகியுள்ளது.

யோகேஷ் குமார்

தமிழ் ஊடகத்தில் பிரதமர் மோடியின் பிரத்யேகப் பேட்டி நாளை ஒளிபரப்பாகிறது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் முதன்முறையாக பிரதமர் மோடியின் பிரத்யேக நேர்காணலை தந்தி தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. நாளை (ஞாயிறு) இரவு 8 மணிக்கு இப்பேட்டி ஒளிபரப்பாகிறது.

பிரதமரான பிறகு ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பதில் பிரதமர் மோடி ஆர்வம் காண்பிப்பதில்லை. இதையடுத்து தமிழ் ஊடகத்தில் அவருடைய பேட்டி ஒளிபரப்பாவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் முதல் பிரதேயகப் பேட்டி என்கிற குறிப்புடன் பேட்டி தொடர்பான விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில், “ஆரம்பிக்கலாமா?” என்கிற விக்ரம் பட வசனத்தை மோடி பேசும் காணொளி இடம்பெற்றுள்ளது.