பிரதமர் மோடி 2-வது நாளாகத் தியானம் ANI
இந்தியா

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாகத் தியானம்

யோகேஷ் குமார்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாகத் தியானம் மேற்கொண்டு வருகிறார்.

7-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் உத்தரப் பிரதேசம், பீஹார், ஒடிஷா உள்ளிட்ட 8 மாநிலங்களின் 57 தொகுதிகளில் பரப்புரை முடிந்தது. நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று கன்னியகுமரிக்கு வந்த மோடி பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு, விவேகானந்தர் மண்டபத்துக்குச் சிறப்புப் படகு மூலம் சென்றார். அங்குத் தனது தியானத்தை அவர் தொடங்கினார்.

மோடி தியானம் செய்வதை முன்னிட்டு, 2000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கடல் பகுதி முழுவதும் இந்திய கடலோர பாதுகாப்புப் படை, இந்திய கப்பல் படை, தமிழக கடலோரப் பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருவதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் நேற்று மதியத்துக்கு பிறகு அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதன் பிறகு மீண்டும் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.