ANI
இந்தியா

பட்டதாரிகள் முதல் வழக்கறிஞர்கள் வரை: கலவையாக அமைந்துள்ள மத்திய அமைச்சரவை!

ராம் அப்பண்ணசாமி

ஜூன் 9-ல் பதவியேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 30 கேபினட் அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 3 பேர் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்கள், 6 பேர் சட்டப்படிப்பை முடித்தவர்கள், 10 பேர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். இதனால் மத்திய அமைச்சரவை கலவையான முறையில் அமைந்துள்ளது.

நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, பியூஷ் கோயல், சர்பானந்த சோனோவால், பூபேந்தர் யாதவ், கிரண் ரிஜிஜூ ஆகிய இந்த 6 கேபினட் அமைச்சர்களும் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்கள்.

ராஜ்நாத் சிங், சிவ்ராஜ் சிங் சௌஹான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், விரேந்திர குமார், மன்சுக் மாண்டவியா, ஹர்தீப் சிங் புரி, அன்னபூர்ணா தேவி, கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்.

மனோஹர் லால் கட்டார், ஹெ.டி.குமாரசாமி, ஜிதன்ராம் மஞ்சி, ராஜீவ் ரஞ்சன் (எ) லாலன் சிங், பிரல்ஹாத் ஜோஷி, கிரிராஜ் சிங் ஆகியோர் பட்டப்படிப்பை முடித்தவர்கள்.

மேலும், கேபினட்டில் இடம்பெற்றுள்ள ராஜ்நாத் சிங் (உத்தரப் பிரதேசம்), சிவ்ராஜ் சிங் சௌஹான் (மத்திய பிரதேசம்), மனோஹர் லால் கட்டார் (ஹரியானா), ஹெ.டி.குமாரசாமி (கர்நாடகா), ஜிதன்ராம் மஞ்சி (பீஹார்), சர்பானந்த சோனோவால் (அசாம்), ஆகியோர் மாநில முதலமைச்சர்களாகப் பதவி வகித்துள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் 81 பேர் வரை இருக்கலாம் என்ற நிலையில், 72 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.