மாதிரி படம் 
இந்தியா

மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் உயிரிழப்பு

உயிரிழந்தவர்களில் ஒருவர் 60 வயது மதிப்புமிக்க பெண்.

கிழக்கு நியூஸ்

மணிப்பூரில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மணிப்பூர் மாநிலம் சுராசாந்த்பூர் மாவட்டத்தில் 7 பேர் காரில் பயணித்துள்ளார்கள். மணிப்பூர் நகர் பகுதியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் கார் சென்றுகொண்டிருக்கும்போது, பதுங்கியிருந்த அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில் நேரடியாகச் சுடும் தூரத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது" என்றார். உயிரிழந்தவர்களில் ஒருவர் 60 வயது மதிப்புமிக்க பெண் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், உயிரிழந்தவர்கள் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு எந்தவோர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணங்களும் அறியப்படவில்லை.

மணிப்பூரில் கடந்த 2023 முதல் வன்முறை நீடித்து வருகிறது. அம்மாநிலத்தில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. அவ்வப்போது ஏதேனும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் ராஜினாமாவைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 13 முதல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.