கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து வீரர் மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் மமதா பேனர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார்.
அர்ஜெண்டினா அணியின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியா வருகை தந்துள்ளார். அவர் இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் ரசிகர்களைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரைக் காண்பதற்காக ரூ. 5000 முதல் ரூ. 18000 வரை டிக்கெட்டுகள் பெற்று ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தார்கள். கொல்கத்தாவிலிருந்து மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சால்ட் லேக் மைதானத்தில் திரண்டனர்.
முன்னதாக சால்ட் லேக் மைதான வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த 70 அடி உயர சிலையை காணொளி காட்சி மூலம் மெஸ்ஸி திறந்து வைத்தார். அதன்பின் மைதானத்திற்கு வந்தார். அவருடன் கால்பந்து வீரர்கள் லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது, மெஸ்ஸியைக் காண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் கால்பந்து கிளப் பிரதிநிதிகள் உட்பட 80 பேர் கொண்ட ஒரு கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது. இதனால் பார்வையாளர்களால் கேலரிகளில் இருந்து ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.
ஒரு கட்டத்தில், கோபமடைந்த கால்பந்து ரசிகர்கள் முழக்கமிடத் தொடங்கினர். இதன் காரணமாக மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் மெஸ்ஸியை உடனடியாக மைதானத்திலிருந்து அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மைதானத்துக்கு வருவதற்கு முன்பே மெஸ்ஸி மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். அதிக விலைக்கு டிக்கெட் வாங்கியும் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள், நாற்காலிகளை உடைத்து மைதானத்திற்குள் வீசி கலவரத்தில் ஈடுபட்டார்கள். கேலரியின் அருகே இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பெருமளவில் மைதானத்துக்குள் நுழைந்தனர். நூற்றுக்கணக்கானோர் மைதானத்துக்குள் புகுந்து, தற்காலிக மேடைகளை தலைகீழாகப் புரட்டினர். மேலும், மைதானத்தில் இருந்த சில பொருட்களுக்குத் தீயும் வைத்தனர்.
காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர், ஆனால் காவல்துறையினரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பார்வையாளர்களை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மைதானத்துக்கு வெளியேயும் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடி நிர்வாகத்துக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எதிராக முழக்கமிட்டனர். அங்கு அதிக எண்ணிக்கையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர், அவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கொல்கத்தா மைதானத்தில் ஏற்பட்ட பெரும் குழப்பத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மன்னிப்பு கோரினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
“சால்ட் லேக் மைதானத்தில் இன்று ஏற்பட்ட நிர்வாகக் குறைபாடுகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளேன். தங்களுக்குப் பிடித்தமான கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை ஒருமுறையாவது காண வேண்டும் என்பதற்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மைதானத்துக்குச் சென்று கொண்டிருந்தேன். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்காக, லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
A tense situation arose at the Salt Lake Stadium in Kolkata when fans engaged in violence after being unable to see the Argentinian football player Messi, who had visited the stadium.