ANI
இந்தியா

அயோத்தி: ராமர் சிலை நெற்றியில் சூரியஒளித் திலகம்!

கிழக்கு நியூஸ்

அயோத்தி ராமர் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரியக் கதிர்கள் ஒளித் திலகம் வடிவில் விழுந்தது.

இதை சாத்தியப்படுத்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை கோயில் அறக்கட்டளை நியமித்திருந்தது. ஐஐஏ பெங்களூருவின் முயற்சியில் இது சாத்தியமாகியுள்ளது. சூரியக் கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழ பல்வேறு கண்ணாடிகள் மற்றும் லென்ஸ் பயன்படுத்தப்பட்டன.

ராம நவமியை முன்னிட்டு நண்பகல் 12 மணிக்கு 3 நிமிடங்கள் வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயில் கட்டியபிறகு வரும் முதல் ராம நவமி இது என்பதால் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வின்போது பக்தர்கள் அனைவரும் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டார்கள்.