மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் எல். முருகன் ANI
இந்தியா

மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் எல். முருகன்

மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

யோகேஷ் குமார்

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மத்தியப் பிரதேசத்திலிருந்து கடந்த பிப்ரவரி 20-ல் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வானார்.

இதனிடையே, மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார். நீலகிரியில் போட்டியிடும் எல். முருகன், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், எல். முருகன் உட்பட 12 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் இவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.