கோப்புப்படம் 
இந்தியா

வறுமையில்லாத மாநிலம் கேரளா: நவ. 1-ல் அறிவிக்கிறார் முதல்வர் பினராயி விஜயன் | Kerala |

விழாவில் நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, கமல் ஹாசன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தகவல்...

கிழக்கு நியூஸ்

நாட்டின் முதல் வறுமை இல்லாத மாநிலமாக கேரளா மாறி உள்ளதாக வரும் நவம்பர் 1 அன்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு, கடந்த 2021-ல் மாநிலத்தின் வறுமையை ஒழிக்கச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது. குறிப்பாக அதே ஆண்டில் வெளியான நிதி ஆயோக் தரவுகளின்படி கேரளாதான் நாட்டில் மிகக்குறைந்த வறுமை விகிதம் கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் வறுமையில் உள்ளவர்களின் சதவிகிதம் 0.7% ஆக மட்டுமே இருந்தது. இதனடிப்படையில் கேரளாவின் மக்கள் தொகையில் சுமார் 64,006 குடும்பங்கள் மிக மிக வறுமையில் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்குச் சிறப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுப்பது, வீடுகளைப் புதுப்பிப்பது, நிலம் வழங்குவது மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம் தற்போது வறுமையில் இருந்த குடும்பங்கள் பலன்பெற்று, ஓரளவு வாழ்வாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனடிப்படையில், நாட்டின் முதல் வறுமை இல்லாத மாநிலமாக கேரளா திகழ்கிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 1 அன்று இதனை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ள விழாவில் நடிகர்கள் கமல் ஹாசன், மோகன்லால், மம்முட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

Kerala to be declared India's first extreme poverty-free state by CM Pinarayi Vijayan on November 1, with actors Mohanlal, Mammootty, and Kamal Haasan participating in the event.