கங்கனா ரணாவத் ANI
இந்தியா

2014-ல் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது: கங்கனா ரணாவத்

யோகேஷ் குமார்

இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது 2014-ல் தான் என கங்கனா ரணாவத் பேசியுள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத் மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் குலு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் பங்கேற்றார். இதில், 1947-ல் மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட போது, ஏன் இந்தியா ‘இந்து தேசம்’ என அறிவிக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பினார்.

அவர் பேசியதாவது:

“நம் முன்னோர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அடிமைப் படுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸின் தவறான ஆட்சியையும் பார்த்தார்கள். 2014-ல் பாஜக வெற்றி பெற்று, பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்னர் தான் நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. அது சனாதன சுதந்திரம், மத சுதந்திரம், சிந்திக்கும் சுதந்திரம், இந்து தேசத்தை இந்து தேசமாக ஆக்குவதற்கான சுதந்திரம்” என்றார்.