தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கைது  @RaoKavitha
இந்தியா

தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கைது

மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக கவிதாவிடம் அமலாக்கத்துறை பல முறை விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

யோகேஷ் குமார்

தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை.

தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை கைது செய்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் கவிதாவை தில்லி அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக கவிதாவிடம் அமலாக்கத்துறை பல முறை விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.