ANI
இந்தியா

வருமான வரி தாக்கல் செய்ய தேதி நீட்டிப்பு?: வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தல் | Income Tax |

அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு வருமான வரித்துறையின் சமூக ஊடகப் பக்கங்களை அணுகலாம் என்றும் அறிவுறுத்தல்...

கிழக்கு நியூஸ்

வருமான வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

நாட்டின் வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடைசி நாள் ஜூலை 31-ஆக இருந்த நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2025 - 26 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய இன்றுடன் (செப்டம்பர் 15) அவகாசம் முடிவடைகிறது. இந்நிலையில், செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள வருமான வரித்துறை, தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு (முதலில் 31.07.2025 வரை இருந்து, 15.09.2025 வரை நீட்டிக்கப்பட்டது) மேலும் 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டதாக ஒரு போலி செய்தி பரவி வருகிறது. ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 15.09.2025 ஆகவே உள்ளது. வரி செலுத்துவோர் வருமான வரித்துறையின் சமூக ஊடக பக்கத்திலிருந்து வரும் அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகளை மட்டுமே நம்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வருமான வரி தாக்கல், வரி செலுத்துதல் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளுக்கு உதவுவதற்காக, எங்கள் உதவி மையம் 24x7 அடிப்படையில் செயல்படுகிறது”

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Income Tax India | ITR Returns | Fake News |